யாழ்பல்கலைகழக தரையிறக்க முயற்சி- இந்திய அமைதிப்படை அதிகாரி ஏஎஸ் கல்கட்டின் அனுபவம்

யாழ்பல்கலைகழகத்தில் இந்திய இராணுவத்தினரின் தரையிறக்க நடவடிக்கை இடம்பெற்று பலவருடங்களாகின்றது.

இதன் போது 29 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

நான் அவ்வேளை மெட்ராசில் இருந்தேன் ( சென்னை)அவ்வேளை எனக்கு இராணுவ அதிகாரி லெப்ஜெனரல் டெபின்டர் சிங்கிடமிருந்து அழைப்பு வந்ததுஇஇலங்கைக்கு விரைவாக சென்று பொறுப்பேற்குமாறு அவர் உத்தரவிட்டார்.

மோதலில் படையினரை இழப்பது என்பது எங்களிற்கு பயங்கரமான கனவு – சிறந்த திட்டமிடல் காரணமாக அந்த இழப்பினை தவிர்த்திருக்கலாம் என்கின்றபோது அது மேலும் கடினமான விடயமாக காணப்படும்.

சில மணிநேரங்களில் நான் பலாலி விமானதளத்தில் தரையிறங்கினேன்இநடவடிக்கைகளை பொறுப்பேற்றேன்.

உயிர் தப்பியவர்களை காப்பாற்றுவதும் யாழ் பல்கலைகழக பகுதிக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதுமே எனது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்பட்டது.

1987ம் ஆண்டு ஒக்டோபர் 12 ம் திகதி இரவு தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்பல்கலைகழகத்தை தங்கள் தலைமையகமாக பயன்படுத்துகின்றனர் எனவும் அந்த அமைப்பின் தலைமையின் சந்திப்பொன்று அங்கு இடம்பெறவுள்ளது எனவும் இந்திய அமைதிப்படைக்கு பொறுப்பான ஜெனரலிற்கு தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கைதுசெய்வதற்காக இந்திய இராணுவம் நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளது ஹெலியை பயன்படுத்தி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர் என்பது விடுதலைப்புலிகளிற்கு முன்னரே தெரிந்திருந்தது.

விடுதலைப்புலிகள் கட்டிடத்தின் மேல்தளத்தில் காத்திருக்க இந்திய இராணுவத்தினர் பொறிக்குள் சிக்குப்பட்டனர்- விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர்.

மோசமான திட்டமிடலிற்கு அப்பால் – இந்திய அமைதிப்படையின் இந்த நடவடிக்கை அடிப்படை தவறுகளை கொண்டிருந்ததுஇ ஹெலிமூலம் தரையிறக்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்னர் தரையிறங்குவதற்கான பாதுகாப்பான இடமொன்றை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை.

ஆகவே எனது முதல் உணர்வு என்பது சீற்றமாகவும்இஅர்த்தமற்ற உயிர் இழப்புகள் குறித்த வேதனையாகவும் காணப்பட்டது.

இதன் காரணமாக உயிர் தப்பியவர்களை காப்பாற்றுவதே எனது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்பட்டது அவர்கள் இன்னமும் யாழ்பல்கலைகழகத்தில் சிக்குப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

அதன் பின்னர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதும் எனது முக்கிய நோக்கமாக காணப்பட்டது.

இந்தியாவில் நாடாளுமன்றத்தில் யாழ்;ப்பாணத்தில் என்ன நடக்கின்றது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அழுத்தம் காணப்பட்டது.

பிரதமர் அலுவலகத்திலிருந்து ரொனென் சென் தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டார். இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்கா செல்கின்றார் அமெரிக்க காங்கிரசில் உரையாற்றவுள்ளார் – இந்த நிலையில் இலங்கையில் சிறிய எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளை இந்திய இராணுவத்தால் கையாள முடியாவிட்டால் அது மிகமோசமான விதத்தில் பார்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மணிக்கூட்டு கோபுரத்தின் கீழ்

முன்னைய நடவடிக்கைகளின் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பது குறித்து நான் உறுதியாகயிருந்தேன்இஎனவே புலிகள் எதிர்பார்த்த ஒரு அணுகுமுறைக்கு பதில் நான் யாழ் நகரை இரண்டு பக்கத்திலிருந்து சுற்றிவளைக்கும் நடவடிக்கையொன்றை முன்னெடுக்க திட்டமிட்டேன்.

மேற்கு பகுதியிலிருந்து நகர்ந்த அணிக்கு பிரிகேடியர் மன்ஜிட் சிங் தலைமை தாங்கினார்இகிழக்கு பக்கமாக நகர்ந்த அணிக்கு இன்னுமொரு பிரிகேடியர் தலைமை தாங்கினார்.

யாழ் நகரத்தின் ஊடாக இந்திய படையினரை அனுப்புவதை நான் தவிர்த்தேன்இஏனெனில் விடுதலைப்புலிகள் அங்கு தயாராகயிருந்தனர்- பல வீடுகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து எங்களை எதிர்கொள்ள தயாராகயிருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் வரைபடத்தை ஆராய்ந்தவேளை நகருக்கு சமாந்திரமாக புகையிரத பாதையொன்று செல்வதை அவதானிக்க முடிந்தது- மேஜர் அணில் கௌல் தனது டாங்கிகள் படைப்பிரிவை இந்த வழியாக நகர்த்தினார்இஅந்த பகுதியில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்ததை அவதானித்த அவர்கள் புகையிரத பாதைகள் ஊடாக நகர்ந்தனர்.

மோதலின் போது மேஜர் அனில் கௌல் தனது ஒருகண்பார்வையை இழந்தார்இஅவருக்கு வீர் சக்ர வழங்கப்பட்டது பிரிகேடியர் மன்ஜிட் சிங்கிற்கு மகாவீர் சக்ர வழங்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து விடுதலைப்புலிகள் எங்கள் மீது மேற்கொண்ட இயந்திர துப்பாக்கி பிரயோகம் குறித்து நான் கவலை கொண்டிருந்தேன்.அவ்வேளை யாழ்ப்பாணத்தில் அதுவே உயரமான கட்டிடம்.

எங்கள் படைவீரர்கள் மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றிவளைத்து அதற்குள் ஏறத்தொடங்கினர்இஅதேவேளை மேஜர் டிப்பி பிரார் யாழ்கோட்டையை அடைந்திருந்தார்இஅங்கிருந்து ஒரு ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டு மணிக்கூட்டு கோபுரத்தில் காணப்பட்ட இயந்திர துப்பாக்கியை அழித்தோம்.

யாழ்ப்பாணத்தின் முன்னரங்குகளில் தயாராகயிருந்த விடுதலைப்புலிகள் பக்கவாட்டிலிருந்தும் பின்பக்கத்திலிருந்தும் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

யாழ்பல்கலைகழகத்தில் சிக்குண்டிருந்த எங்களது படையினரை நாங்கள் மீட்டு உயிர் தப்பியவர்களை சென்னைக்கு அனுப்பிவைத்தோம்.

16 நாட்களின் பின்னர் யாழ்ப்பாணம் வீழ்ந்தது ஆனால் யாழ்ப்பாணத்திற்கான இந்திய அமைதிப்படையின் முதற்கட்ட சமர் இது.

இன்று வரை யாழ்பல்கலைகழகத்தில் நாங்கள் தவிர்த்திருக்ககூடிய உயிரிழப்புகள் குறித்த கவலை எனக்குள்ளது.