ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு குறித்து பிரிட்டன் எச்சரிக்கை

ஸ்னாப் செட் அதன் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் குழந்தைகளுக்கான தனியுரிமை ஆபத்துக்களை சரியாக மதிப்பிட தவறியிருப்பதாக பிரிட்டனின் தரவு கண்காணிப்பு அமைப்பு ( UK watchdog) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு இறுதி அமுலாக்க முடிவை எடுப்பதற்கு முன்னரும் நிறுவனத்தின் பதில் கருத்தில் கொள்ளப்படும் என அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஸ்னாப் செட்டினால் ஏப்ரலில் தொடங்கப்பட்ட “my AI” நுட்பத்தில் காணப்படும் குறைபாடுகளை போதுமான அளவில் நிவர்த்தி செய்யத் தவறினால், அது இங்கிலாந்தில் தடை செய்யப்படலாம் என அந்நாட்டு தகவல் ஆணைக்குழுவின் (ICO)ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

‘My AI’ஐத் தொடங்குவதற்கு முன், குழந்தைகள் மற்றும் பிற பயனர்களுக்கு காணப்படும் தனியுரிமை அபாயங்களை போதுமான அளவு கண்டறிந்து மதிப்பிடுவதில் ஸ்னாப் செட் இன் தோல்வியை கண்டறிந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் புகைப்படங்களை பிடிப்பது சீர் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஸ்னாப் செ ஆப் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.