விடுதலைப் போராட்ட வரலாற்றில் மன்னார் மண் பெற்றெடுத்த மகத்தான மாவீரர் லெப்.கேணல் விக்ரரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்றைய தினம் (12.10.2023) இடம்பெற்றுள்ளது.
அஞ்சலி நிகழ்வு
இதன்போது லெப்.கேணல் விக்ரரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட நகரசபை,பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை: தொடரும் இழுபறி நிலை
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை: தொடரும் இழுபறி நிலை
சகோதரியின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சகோதரியின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த அதிரடி உத்தரவு