பிரிட்டனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ – பிரித்தானியா

பிரெக்சிற்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய சலுகையை ஏற்றுக்கொள்ள முடியாது என லண்டன் நம்புவதாக பிரித்தானிய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல் மூன்று வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கூறினர்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்வரும் ஜனவரி மாத வெளியேற்றத்தைத் தொடர்ந்து நாட்டினை ஒற்றை சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தில் வைத்திருக்கும் நிலைப்பாடு முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் டிசம்பர் 31 க்குப் பின்னரான நடவடிக்கை குறித்து பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், மீன்பிடி, பொருளாதாரம் போன்றவற்றில் முரண்பாடுகள் தொடர்கின்றன.

இருப்பினும் உடன்பாட்டை எட்டி குழப்பமான இடைவெளியைத் தடுக்க இரு தரப்பினரும் ஞாயிற்றுக்கிழமை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.