தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது உடுவில் பிரதேசம்

நேற்று இரவு முதல் தற்காலிகமாக முடக்கப்பட்ட உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினரின் ஆலோசனைக்கு அமைவாக இவ்வாறு முடக்க நிலை நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பழை கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் எனவும், கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உடுவில் பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் தொற்றாளர்களுடன் தொடர்புடையோரை சுயதனிமைப்படுத்தும் பொறிமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.