நாளை முதல் முடக்கப்படும் பகுதிகள் மற்றும் விடுவிக்கப்படும் பகுதிகள் முழுமையான விபரம் இதோ

கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் நாளையதினம் தளர்த்தப்படுவதடன், மேலும் சில புதிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நாளைய தினம் அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிரிசந்த சேவன வீடமைப்பு திட்டம் (கிரான்பாஸ் பொலிஸ் பிரிவு), சிரிமுத்து உயன (கிரான்பாஸ் பொலிஸ் பிரிவு), லக்ஹிரு சேவண ரயில் தொடர்மாடி வீடுகள் (மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு), சிரிசர உயன (பொரள்ளை பொலிஸ் பிரிவு) ஆகியவற்றின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படுகின்றன.

அத்துடன், கொழும்பில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களையும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இதன்படி, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் செகந்த கிராம உத்தியோகத்தர் பகுதி, பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பகுதி, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பகுதி, லக்சந்த சேவன வீட்டுத் திட்டம் மற்றும் மட்டக்குளி பொலிஸ் பிரிவின் ஃபர்கஷன் வீதியின் தென் பகுதி ஆகியன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், கொம்பனிவீதியின் ஹனுபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் 60வது தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி ஆகியனவும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் மயூர பிளேஸ் பகுதி நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் கெரவலபிட்டி, ஹேக்கித்த, குருந்துஹேன, எவரிவத்த மற்றும் வெலிகடமுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நாளை முதல் தளர்த்தப்படுகின்றது,

பேலியகொட பொலிஸ் பிரிவின் பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் தனிமைப்படுத்தலும் நாளை முதல் தளர்த்தப்படுகின்றது.

பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்த, பேலியகொட கங்ஹபட மற்றும் மீகஹவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது,

கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் தலதுவ கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள எம்.சி வீட்டுத்திட்டம், வெயங்கொட பொலிஸ் பிரிவிலுள்ள ஹிரிபிட்டி தெற்கு கிராம உத்தியோகத்தர் பகுதியின் சுதந்திர மாவத்தை ஆகியன தனிமைப்படுத்தப்படுகின்றன.

வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவின் நயிதுவ பகுதி, வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் துவே வத்த பகுதி ஆகியன புதிதாக நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படுகின்றன.

பேலியகொட பொலிஸ் பிரிவின் பட்டியமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் ரோஹண விஹார மாவத்தை புதிதாக தனிமைப்படுத்தப்படுகின்றது,

கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் ஹ{ணுபிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் வெலிகந்த பகுதியும், நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் திஹாரி வடக்கு, திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படுகின்றன.

Ad
களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்ஹல பிரதேச செயலக பிரிவின் வெகன்கல்ல கிழக்க மற்றும் வெகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் புதிதாக தனிமைப்படுத்தப்படுகின்றன.

அத்துடன், குடா ஹினிட்டியன்கல கிராம உத்தியோகத்தர் பிரிவும் புதிதாக நாளை முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இதேவேளை, நாட்டில் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் எனவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.