இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா முதலீடு

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா முதலீடு செய்யவுள்ளது.

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நல்வாழ்வுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை இது காட்டுவதாக தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதனுடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்படி, இந்தியாவின் அதானி குழுமத்தின் துறைமுகப் பிரிவினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனைய நிர்மாணப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.