LATEST
வடக்கின் 5 மாவட்டங்களை இணைக்கும் தென்னை முக்கோணம்! நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்! குற்றச் செயல்களை கட்டுப்படுத்த நாடளாவிய தேடுதல் வேட்டை தீவிரம்! இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு! வடக்கின் 5 மாவட்டங்களை இணைக்கும் தென்னை முக்கோணம்! நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்! குற்றச் செயல்களை கட்டுப்படுத்த நாடளாவிய தேடுதல் வேட்டை தீவிரம்! இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.591 பில்லியன் டொலராக உயர்வு! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை –கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஆபத்து – இரண்டு கடற்பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை! அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்ட டின் மீன்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தீவிரமடையும் டெங்கு – 89,033 பேருக்கு பாதிப்பு!
உள்ளூர்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்!

August 9, 2026 · National Tamil LK

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார். 

கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

2024ஆம் ஆண்டில், குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. 

இருப்பினும், இதுவரை அக்கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) சுகயீன விடுமுறை அறிவித்து பணிக்குச் சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்தார். 

இதன்படி, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது

Related Stories

Explore More ›