LATEST
ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்! ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்!
உள்ளூர்

7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்!

July 8, 2026 · National Tamil LK

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.

வாகனப் பேரணியாக கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த அதிகாரிகளின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடந்த 6ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, சிறைக்கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

Explore More ›