டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு!

கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய, மொத்தம் 202,025 விவசாயிகளுக்கு 12,341.5 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை அறிவித்துள்ளது.
இதில், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக முற்றாகப் பாதிக்கப்பட்ட 148,000 ஏக்கர் நெல் வயல்களுக்காக 116,278 விவசாயிகளுக்கு 8,888.5 மில்லியன் ரூபாவும், விவசாய திணைக்களத்தின் ஊடாக மகாவலி வலயங்கள், மாகாணங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான பகுதிகளில் மக்காச்சோளம், மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களைச் செய்கை பண்ணிய 85,747 விவசாயிகளுக்கு 3,453 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




