விமான விசாரணையில் நாமல் ராஜபக்ஷ மீது புதிய நடவடிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை சந்தேக நபராகப் பெயரிடுமாறு குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
விமானக் கொள்முதல் பரிவர்த்தனையில் நடந்ததாகக் கூறப்படும் இலஞ்சச் சம்பவம் குறித்த விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2006-ஆம் ஆண்டின் 05-ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 3-ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




