LATEST
மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் சாத்தியம் – அமைச்சர் அனுர கருணாதிலக்க விமான விசாரணையில் நாமல் ராஜபக்ஷ மீது புதிய நடவடிக்கை! NPP-க்கு ஆட்சி கிடைத்தாலும் முழு அரச அதிகாரம் இன்னும் இல்லை என பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இன்ஜின், பவர் செட் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் பாதிப்பு – 27 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை! 2020 தோல்வியை மறந்து நியூயார்க்கில் மகுடம் சூடிய ஸ்வரேவ்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் சாத்தியம் – அமைச்சர் அனுர கருணாதிலக்க விமான விசாரணையில் நாமல் ராஜபக்ஷ மீது புதிய நடவடிக்கை! NPP-க்கு ஆட்சி கிடைத்தாலும் முழு அரச அதிகாரம் இன்னும் இல்லை என பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இன்ஜின், பவர் செட் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் பாதிப்பு – 27 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை! 2020 தோல்வியை மறந்து நியூயார்க்கில் மகுடம் சூடிய ஸ்வரேவ்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு!
உள்ளூர்

மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் சாத்தியம் – அமைச்சர் அனுர கருணாதிலக்க

September 14, 2026 · National Tamil LK

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, தற்போதைய நிலையில் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாக பல தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவில் உரிய தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கடந்த காலங்களைப் போல எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது முறையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

Related Stories

Explore More ›