யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மூதாட்டி ஒருவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (9) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி, அல்வாய் கிழக்கு பகுதியில் கடந்த அக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
காசா பகுதியில் மனிதாபிமான போர் நிறுத்தம்…! அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
காசா பகுதியில் மனிதாபிமான போர் நிறுத்தம்…! அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
கழுத்து நெரித்துக் கொலை
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று உடற்கூற்று மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா அனுப்பி வைத்திருந்தார்.
அதன் அறிக்கையில் மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மூதாட்டியை பராமரித்து வந்த இருவர் மற்றும் வீட்டு வேலையாள் அடங்கலாக மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸார் நேற்று (9) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த சந்தேகநபர்களை இன்று (10) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.