பண்டிகை காலங்களில் மூன்றாவது அலையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்: கொழும்பு மேயர்

கொழும்பில் கொரோனா நிலைமை நகரசபை அதிகாரிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும் பண்டிகை காலத்தில் மூன்றாவது அலைகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று கொழும்பு மேயரின் வேண்டுகோளின் பேரில் கொரியாவின் சியோல் பெருநகர அரசு 18,000 முக்கவசங்களை வழங்கியது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.