யாழ்ப்பாணத்தையும் விரட்டும் கொரோனா! இன்றும் அடையாளப்படுத்தப்பட்ட புதிய தொற்றாளர்கள்

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரையான 24 மணித்தியாலத்தில் 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 200 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 113 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 பேரும் நுவரெலியாவில் 38 பேரும் கண்டி மாவட்டத்தில் 16 பேரும் வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் யாழ். மாவட்டத்தில் 6 பேரும் மட்டக்களப்பில் ஒருவரும் அம்பாறையில் 28 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்