ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யக்கூடாது! டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை!

இன்னும் சில நாட்களே பதவிக்காலம் உள்ள நிலையிலும், ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்கிய துருக்கி மீது தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து துருக்கி ஏற்கனவே ஏவுகணை தடுப்பு தளவாடங்களை வாங்கியுள்ளது.எனவே தங்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் அடிப்படையில் அதன் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்காவின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுதப்பரவல் துறை உயர் அதிகாரி கிறிஸ்டோபர் ஃபோர்டு கூறியுள்ளார்.

அத்தோடு இந்தியா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்க கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.