எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு அமைய ஸ்ரீலங்காவுக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை இரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய எம்.சி.சி பணிப்பாளர் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஸ்ரீலங்காவிற்கான நிதியுதவியை நிறுத்துவது என எம்.சி.சியின் பணிப்பாளர் குழு தீர்மானித்துள்ள போதிலும் ஸ்ரீலங்காவிற்கு தொடர்ந்தும் உதவப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு அமைய ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை இரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அதன்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஸ்ரீலங்கா நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஸ்ரீலங்காவின் நட்பு நாடாக தொடர்ந்தும் காணப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம், ஸ்ரீலங்காவில் கொரோனாவை எதிர்கொள்வதற்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.