ஜனாஸா எரிப்பு தொடர்ந்தால் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்குவர்! நீதி அமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் பாரிய பிரச்சினைகள் உருவெடுக்கும். அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்தவும் வைத்து விடலாம் என நீதி அமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளமொன்றில் இயங்கி வரும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் புதைக்க முடியும் என்றால், அவற்றை ஏன் இலங்கையில் புதைக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதன் ஊடாகத் தொற்று பரவாது என்பதை தொற்று நோய் மற்றும் வைரஸ் குறித்த பிரபல்யம் வாய்ந்த பேராசிரியர் மலித் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், அவை முஸ்லிம் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க உரிய முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.