மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 600 பேருக்கு உடனடி இடமாற்றம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் கடமை புரியும் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு உடன டியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த திணைக்களத்தில் கடமையாற்றும் 600 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார் களைப் பரிசீலித்து அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்று அதன் ஆணையர் தெரிவித் தார்.

தான் உட்பட கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி சேவையில் இணைந்து கொண்டவர்கள் மாத்திரம் தொடர்ந்தும் போக்குவரத்து திணைக்களத்தில் பணி யாற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த திணைக்களத்தில் இடமாற்றங்கள் பல கட்டங்களாகச் செயற்படுத்தப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.