விடுதலைப் புலிகளை பாராட்டி நாடாளுமன்றில் கருத்து வெளியிடும் எம்.பிக்களை தண்டிப்பதற்கு புதிய சட்டம்

விடுதலைப் புலிகள் சம்பந்தமாக பாராட்டி நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தண்டிப்பதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டத்தை உருவாக்க உள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரான வீரசேகர, பொலிஸ் நிலையங்களுக்கு விஜயம் செய்த போதே இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை தூண்டும் வகையிலும், சிங்கள மக்களுக்கு துவேசத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசுகின்றனர் என்பது எமக்கு தெரியும்.

இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். ஜேர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்றத்தில் ஹிட்லரை பாராட்டி பேச முடியாது.

நாசி கட்சியை ஆதரித்து பேச முடியாது. அங்கு அது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி பேசுவது சிறைக்கு செல்லக் கூடிய குற்றம்.

இது போன்ற சாட்டை நாங்களும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவோம். அதன் பின்னர் அவர்களுக்கு தேவையான வகையில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேச முடியாது.

இதன் மூலம் தமிழ் மக்களை தவறாக வழி நடத்துவதை குறைக்க முடியும் எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.