மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் வேலையல்ல

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளுக்கு உரிமையான வேலையல்ல எனவும் அவற்றை அதிகாரிகளே தீர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு எதுவான காரணங்களை நீக்குவதே அரசியல்வாதிகளின் கடமை. அரசியல்வாதிகள் இருப்பது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்ல.

அதற்கான காரணங்களை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பும் கடமையும். சம்பிராதய அரசியல் பயன்பாட்டில் இது மிகவும் சிரமமானது எனவும் அழகப்பெரும கூறியுள்ளார்.