கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டால் நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் – எதிர்க்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு

ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை மீறப்பட்டால் அது நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தெளிவில்லாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

ஆட்சியாளர்களிடமும் குறைபாடுகள் இருக்கலாம் என குறிப்பிட்ட அவர் தவறான முடிவுகளை விமர்சிக்கும் மக்களின் உரிமையும் இதன்போது மதிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிப்பவர்களின் கவலைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறிவிட்டது.

இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாகவும், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.