பின் கதவால் செல்லும் வேலைகளுக்கு அமெரிக்கா இணங்காததால் எம்.சீ.சீ. உடன்படிக்கையில் கையெழுத்திட முடியவில்லை

எம்.சீ.சீ. உடன்படிக்கையில் கையெழுத்திடும் தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு இருந்த போதிலும் அதனை வேறு பெயரில் கையெழுத்திடுவது போன்ற பின் கதவால் செல்லும் வேலைகளுக்கு அமெரிக்கா இணங்காது என்பதால், அதில் கையெழுத்திட முடியாமல் போனது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசு நாடு என்ற வகையில் இலங்கை அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக அமெரிக்கா பின் கதவால் வருவதை நிராகரித்துள்ளது.

நிதியுதவி வழங்கும் விதத்தை அமெரிக்கா, அரசாங்கத்திடம் தெளிவாக கூறியுள்ளது.

அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவி வழங்க முயற்சித்த விதத்தில் தவறுகள் எதுவும் இருக்கவில்லை எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராகி வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொன்சேகா, கொழும்பு துறைமுகம் என்பது பெரியளவில் இலாபம் ஈட்டும் நிறுவனம் என்ற வகையில் அதனை துண்டு, துண்டுகளாக விற்பனை செய்வது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம் எனக் கூறியுள்ளார்.