பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று பரவும் நிலையில் அங்கிருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை இடைநிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார்.
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் விமானங்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.