அமெரிக்கா மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது – ஜோ பைடன் எச்சரிக்கை

அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவினால் உயிரிழக்க நேரிடலாம் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு மேல் உயிரிழக்கலாம். அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் கொரோனா தடுப்பு மருந்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.

மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும். அமெரிக்கா மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. தடுப்பு மருந்தை மக்களிடம் சென்றடையும் முயற்சியில் தீவிரமாக இருக்க வேண்டும். அதிகமான மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக ஒய்வில்லாமல் உழைத்த விஞ்ஞானிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அமெரிக்க மக்களே கொரோனா தடுப்பு குறித்து பயப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை. தடுப்பு மருந்து இருப்பின் நீங்கள் அதனை தாரளமாக போட்டுக் கொள்ளலாம்“ எனத் தெரிவித்துள்ளார்.