அவுஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக ஆரோன் பிஞ்ச், டெஸ்ட் அணி தலைவராக டிம் பெய்ன் ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் டெஸ்ட் அணிக்கு ஸ்மித்தை தலைவராக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. டிம் பெய்னும் தலைவர் பதவி குறித்து யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் ஸ்மித் மாத்திரமே தலைவருக்கான தெரிவில் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் எர்ல் எட்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நாங்கள் ஆரோன் பிஞ்ச், டிம் பெய்ன் உட்பட மூன்று சிறந்த தலைவர்களை பெற்றுள்ளோம். தற்போது சில சிறந்த இளம் வீரர்கள் அணிக்குள் வந்துள்ளனர்.
ஆகவே, ஸ்மித்துடன் மட்டுமே தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. ஒட்டுமொத்தமாக யார் சிறந்தவர்கள் எனப் பார்கக் வேண்டும்.
அவர் அணிக்கு வரும்போது இளம் வீரராகவும், சிறந்த தலைவராகவும் இருந்தார். எந்தவொரு பரிந்துரையையும் கொடுக்கும். நாங்கள் நாங்கள் உட்கார்ந்து அடுத்த தலைவர் யார்? என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்’’ என்றார்.