சிறிலங்கா ,தென்னாப்பிரிக்கா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2017 இல் காலாவதியானது. 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான பங்காளர் மன்றத்தின் ஆறாவது அமர்வில், சுற்றுலா ஒத்துழைப்பு குறித்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நுழைய முன்மொழியப்பட்டது.

அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சுற்றுலா அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.