பிரபல இயக்குனருடன் இணைந்த அமலாபால்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் நடிப்பில் தற்போது அதோ அந்த பறவை போல, கடாவர் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.

தற்போது இவர் கன்னடத்தில் “யூ டர்ன்” (U Turn) படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், குடி யெடமைதே ( Kudi yedamaithe ) என்னும் இணையத் தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த 8 பகுதிகள் கொண்ட ஆஹா (aha) ஒரிஜினல் தொடர், ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது.

இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இக்கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டது. இது தவிர இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கும் ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.