இன்று யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற படுகொலை!

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மீசாலைப் பகுதியில் வைத்து தாக்குதலுக்குள்ளான நபர் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிலில் சென்ற இனம் தெரியாத நபர்கள் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் 47 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் எதற்காக கொலை செய்யப்பட்டார் யார் கொலை செய்தார்கள் என்பது தொடர்பான எந்த தகவல்களும் இது வரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.