வட கடற்கரை பகுதியில் பத்து ஸ்பெர்ம் வகை திமிங்கலங்கள் இறப்பு!

வட கடற்கரை பகுதியில் பத்து ஸ்பெர்ம் வகை திமிங்கலங்கள் இறந்துள்ளதாக பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் லைஃப் மீட்பு படை (பி.டி.எம்.எல்.ஆர்) தெரவித்துள்ளது.

ஹல் அருகே டன்ஸ்டால் மற்றும் விதர்ன்சியா கடற்கரை பகுதியில் குறித்த திமிங்கலங்கள் இறந்துள்ளன.

மோசமான வானிலை மற்றும் திமிங்கலங்களின் அளவு ஆகியவற்றினால், திமிங்கலங்களை காப்பாற்ற முடியாமல் போனதாக பி.டி.எம்.எல்.ஆர். உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் திமிங்கலங்கள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து காரணமாக உயிரிழப்பை சந்தித்திருக்கலாம் என செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்பெர்ம் வகை திமிங்கலங்களின் அளவு 65 அடி (20 மீ) நீளம் மற்றும் 80 டன் வரை எடையுள்ளதாக இருக்கும். அதாவது அவற்றை தூக்கி நகர்த்துவதற்கு பாதுகாப்பான முறைகள் எதுவும் இல்லை.