இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச் சத் தை அடைந்து வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண் ணிக்கை பதிவாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 102 இலட்சத்தை நெருங்கியது. 97.40 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரு கிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண் ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக 101 இலட்சத்து 69 ஆயிரத்து 118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 இலட்சத்து 40 ஆயிரத்து 108 பேர் குணமடைந் துள்ளனர், 2 இலட்சத்து 81 ஆயிரத்து 667 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,47, 343 ஆக உயர்ந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.