இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அதன் பங்காளி அமைப்புக்கள் ஊடக அமைச்சருடன் பேச்சு

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பங்காளி அமைப்புக்கள் மற்றும் துணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு இந்த வாரம் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சந்திப்பொன்றினை நடாத்தியிருந்தனர்.

அமைச்சரால் முன்மொழியப்பட்ட ஊடக சீர்திருத்தங்களை உருவாக்கும் போது பங்குதாரர்களிடமும் ஆலோசனை கேட்குமாறு கேட்டுக்கொண்டனர்.

புத்தாண்டில் அவ்வாறு செய்வதாக அமைச்சர் ஒப்புக் கொண்டார்.

இக் குழுவில் இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், இலங்கை பத்திரிகையாசிரியர் கழகம், சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தென்னாசிய சுதந்திர ஊடக சங்கம், முஸ்லிம் மீடியா போரம், ஊடக ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.