கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் நேற்று நீரில் மூழ்கி காணாமல்போன நபரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
கல்மடு குளத்திற்கு நேற்று பிற்பகல் 3 மணியளவில் இருவர் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது அதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் காணாமல் போனவரை தேடும் பணிகள் நேற்று பிற்பகல் 3 மணி முதல் இன்று காலை வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும், கல்மடுநகர் – சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.