முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி தொடர்ந்தும் முன்னிலை

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியுசிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 431 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அணித்தலைவர் வில்லியம்சன் அதிகபட்சமாக 129 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கட்டினை இழந்து 30 ஓட்டங்களை பெற்றுள்ளது.