கொழும்பில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு மாவட்டத்தில் நேற்று பதிவான 235 கொரோனா தொற்றுக்களில் 150 பேர் அவிசாவளையில் இருந்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத் தகவல்களின்படி, நேற்று மொத்தம் 598 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.

அவர்களில் 5 பேர் வெளிநாட்டிற்கு திரும்பியவர்கள், மீதமுள்ள 593 பேர் உள்ளூர்வாசிகளாவர்.

593 தொற்றாளர்களில் 235 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 164 பேர் கம்பாஹாவைச் சேர்ந்தவர்கள், 84 பேர் களுத்துறையை சேர்ந்தவர்களாவர்.