கிருஷ்ணபுரம் கொரோனா வைத்தியசாலையில் உரிய பராமரிப்பு இல்லை!நோயாளர்கள் விசனம்

கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய பராமரிப்புகள் இல்லையென விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கொரோனா நோயானது நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றவர்களை தாக்குவதாகவும்,அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடிய உணவுகளை உண்ணுமாறும் மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் குறித்த கிருஷ்ணபுரம் கொரோனா வைத்தியசாலையில் சத்தான உணவுகள் வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளையில், வைத்தியசாலையில் நோய் குணமடைந்து செல்லவுள்ளவர்களும், நோய்களோடு வைத்தியசாலைக்கு சென்றவர்களும் ஒன்றாக இருப்பதாகவும், இதனால் அங்கு உள்ளவர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும்,அங்குள்ள நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக சற்றுமுன்னர் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது