தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பொலிவூட் படம் ஒன்றில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்கவுள்ளாராம்.
கன்னடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் தெலுங்கில் அவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா, தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான், இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி தந்தை மகள் பற்றிய கதையம்சத்தில் உருவாகும் அப்படத்தை விகாஸ் பால் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் மகளாக ராஷ்மிகா நடிக்க உள்ளார்.