வவுனியா மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட கூட்டம்

கொரோனா தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், வவுனியாவில் கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை மற்றும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸார், இராணுவ அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.