ஸ்ரீலங்காவில் கடுமையாக அமுலாகும் சட்டம்! மீறினால் சட்ட நடவடிக்கை

எதிர்வரும் நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் இல்லாதுவிட்டாலும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து காரணிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது அவசியமானது என்றார்.