யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நாமலை யார் வைத்திருப்பதென்பதில் கடும் போட்டி எடுபிடிகளிடையே ஏற்பட்டிருந்தது.
வுழமையாக கொழும்பிலிருந்து வருபவர்களை தாங்களே அழைத்துவருவதாக காண்பிக்க டக்ளஸ் -அங்கயன் தரப்பு போட்டுப்பிடித்துக்கொள்வது வழமை.
ஒரு தரப்பு அழைத்துவர இன்னொரு தரப்பு செய்கூலி சேதாரமின்றி விளம்பரம் தேடுவது வழமை.
அதனால் ஆதரவாளர்கள் தமக்குள் போட்டி போட்டு மோதிக்கொள்வது வழமை. இன்று வருகை தந்த நாமலை யார் கொண்டு திரிவதென்பதில் மோதல் மூண்டது.
பொதுஜனபெரமுன அமைப்பாளர் ராஜீவ் துண்டுபிரசுரம் அடித்து ஒருபுறம் திரிய இன்னொரு புறம் அங்கயன் இன்னொரு புறம் திரிந்தது புதிய கதை.
இதனிடையே இணக்க அரசியல் புகழ் சுமா-சிறீ கூட்டும் புதிதாக நல்லிணக்கம் காண்பிக்க வந்துள்ள சி.வி.விக்கினேஸ்வரனும் தவறாது மாவட்ட செயலக கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதனிடையே முன்னணி தலைவர்களும் இன்றையதினம் மீண்டும் பதுங்கிக்கொண்டனர்.