வாழைச்சேனையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மா நகர் கிராமத்தில் வீட்டுத் தோட்டம் பராமரித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹமது கனீபா சுலைமா லெப்பை வயது 52 என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் தோட்டத்திற்கு அருகாமையில் வசிக்கு ஒருவர் இவரது நடமாட்டம் காணப்படவில்லை, வீட்டின் மின் விளக்குகள் அணைக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முற்றத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அதனையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தாருக்கும், பிரதேச கிராம அதிகாரிக்கும் அறிவித்ததை தொடர்ந்து சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.