அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று (05.01.2021) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். தற்போது கொவிட்19 தாக்கத்திற்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்களை எதிர் நோக்கியிருக்கின்றனர்.

எனவே அவர்களது பிள்ளைகள் குடும்பத்தினரின் நலனையும் அவர்களது நலனையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டவர்கள் எமது உறவுகளை சிறைகளில் மடியவிடவேண்டாம், தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை, கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கு போன்ற பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.