நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள பொது சுகாதார அதிகாரிகள்

பொது சுகாதார அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஒரு கிழமைக்காவது பொது நிகழ்வுகளில் இருந்து விலகியிருக்குமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூன்றுநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து சமார் 32 நாடாளுமன்ற உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஹக்கீம் மற்றும் நாணயக்காரவுடன் நாடாளுமன்ற மின்தூக்கியில் பயணித்தவர்கள் அவர்களுடன் ஒன்றாக இருந்து உணவருந்தியவர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் முதலாவது தொடர்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்பாளர்களாக கருதப்பட்டு என்டிஜன் பரிசோதனைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சபாநாயகர் சுகாதார அதிகாரிகளுடன் மற்றொரு சுற்றுசந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.