பிரித்தானியாவில் மேலும் 1401 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,981 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 40,261 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதனால் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,583,907 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் 5,000,000க்கும் அதிகமான மக்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
466,796 பேர் இதுவரை தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒவ்வொரு நிமிடமும் 200 ஜாப் என்ற விகிதத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவதாக சுகாதார செயலாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அனைவரும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பெப்ரவரி நடுப்பகுதியில் 15 மில்லியன் மக்களை தடுப்பூசிகளுடன் சென்றடைய வேண்டும் என்ற இலக்கை அடைய அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவின் (ஜே.சி.வி.ஐ) துணைத் தலைவர் பேராசிரியர் அந்தோனி ஹார்ண்டன் இதனை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடப்பட்ட எண்களின் தினசரி புள்ளிவிவரங்கள் இந்த வார தொடக்கத்தில் சரிவைக் காட்டியுள்ளன “பெரும்பாலும் ஒட்டுமொத்த போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த நேரத்தில் பிரித்தானியா ஒரு “மோசமான சூழ்நிலையில்” இருப்பதாக பேராசிரியர் அந்தோனி ஹார்ண்ட சுட்டிக்காட்டியுள்ளார்.