பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்

பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கர் கோரியுள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கையில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய சில விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத்தின் வரையறை மற்றும் வழக்குகளை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட கட்டமைப்பை இலங்கை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

பயங்கரவாதத்தை தடுக்கும் நோக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும்.

பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயமான விசாரணை மற்றும் உரிய செயல்முறையை வழங்க வேண்டும்.

இறுதியாக, பயங்கரவாத சந்தேகத்தில் குற்றம் சுமத்தப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்பை வழங்குவதன் அவசியத்தை நிவர்த்திக்க வேண்டும்.

இதன் மூலம் தலைமுறை தலைமுறையாக தொடரும் வெறுப்பு மற்றும் மோதலின் ஒரு தீய சுழற்சியைத் தடுக்க முடியும் என்று ஹானா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.