இலங்கை தொடர்பில் நமுத்து போன தீர்மானமொன்றை கொண்டுவர பிரிட்டன் முற்பட்டுள்ளதா?

இலங்கை தொடர்பில் நமுத்து போன தீர்மானமொன்றை கொண்டுவர பிரிட்டன் முற்பட்டுள்ளதான சந்தேகத்தின் மத்தியில் அந்நாட்டு தூதுவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹ_ல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46ஆவது கூட்டத் தொடர் உட்பட பல விடயங்கள் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஒன்றைப் பிரிட்டனே கொண்டுவரவுள்ளது.

ஏற்கனவே தமிழ் தரப்புக்கள் இன அழிப்பு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமென அடுத்த கட்ட காய்களை நகர்த்தியுள்ளமை தெரிந்ததே.