வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாயார் ஒருவர் மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாயார் ஒருவர் மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனை தெடி வந்த தாயார் ஒருவர் 18-02-2021 நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்

கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான சுந்தரலிங்கம் கனகமணி என்ற தாயாரே சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் சாவடைந்துள்ளார்

வஙிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான சுந்தரலிங்கம் சுரேஷ்குமார் கடந்த 2009 ஆண்டு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தத்த்தின் போது காணாமல் ஆக்கப்பட்டார் இன்றுவரை அந்த செல்வமகனை அன்பு தாயாரால் காணாமுடியாத நிலையில் இவ்வாறு சாவடைந்துள்ளார்

இலங்கை அரச படைகளாலும்,துணை இராணுவக்குழுக்களாலும்,கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டி கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட
போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயாரே இவ்வாறு சாவடைந்துள்ளார்

நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தந்தையர்கள் சாவடைந்த நிலையில் குறித்த தாயாரும் நேற்றைய தினம் சாவடைந்துள்ளார்

எனினும் இவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்புக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின்
ஊடகப்பிரிவு
19-02-2021