கொழும்பில் குறைவடையும் ஒட்சிசனின் சதவீதம்

கொழும்பு நகரின் வளிமண்டல பரப்பில் காணப்படும் ஒட்சிசன் வாயுவின் சதவீதம் குறைவடைந்து வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரின் வளிமண்டல பரப்பில் காணப்படும் ஒட்சிசன் வாயுவின் சதவீதம் சனத்தொகை விகிதத்துடன் ஒப்பிடும்போது, ஒட்சிசன் குறைந்து வருவதை விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சு நகரில் காற்று மாசடைவதைத் தடுக்க கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து கொழும்பு நகரில் தினமும் ஒட்சிசன் வாயுவின் செறிவை பரிசோதிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபைப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மேயர் ரோஷி சேனாநாயக்க கோரியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர, கொழும்புமாநாகர மேயர் ரோசி சேனநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு வளிமண்டலத்தில் குறையும் ஒட்சிசனின் அளவு குறித்து கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.