கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனவர்கள் இருப்பார்களாயின் உடனடியாக அது தொடர்பாக குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிக்கு தெரியப்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எவ்வித தடைகளுமின்றி கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான வசதிகளை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவுள்ள தடுப்பூசிகளின் முதல் தொகுதி எதிர்வரும் சில நாட்களுக்குள் கிடைக்கவிருப்பதாகவும், அவை கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.