போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை படைகள் மீது-யஸ்மின் சூகாவின் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா இராணுவத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருபத்தெட்டு அதிகாரிகளை, ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அர்த்தப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையில், ஐ.நாவின் முன்னாள் விசேட நிபுணர் யஸ்மின் சூகா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“அபதனயன்” என்ற சிங்கள சொல்லின் மொழிபெயர்ப்பு நேரடியாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது, வன்னிப் படை நடவடிக்கையில் வெற்றிபெற்ற, இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில், 1971 எழுச்சியின் முன்னாள் கிளர்ச்சியாளரின் பரிந்துரையின் பேரில், யஸ்மின் சூகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அபதயன்”களை கட்டாயமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென ஐ.நாவின் முன்னாள் விசேட நிபுணர் யஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.